"தமிழுக்கு அமுதன்று பேர் இன்பததமிழ் எங்கள் உயிருக்கு நேர் "என்றார் ,பாவேந்தர் பாரதி தாசன் .
தமிழ் என்றால் அமுதம் .
அமுதம் என்றால் இனிமை ,சுவை என்பதாகும் .
அமுதம் எளிதில் கிடைக்காத ஒன்று .அரிதான ஒன்று .தனித்துவமான ஒன்று.
இந்த அமிழ்தத்தில் இருந்து தான் தமிழ் என்ற சொல்லே உருவானது .அமிழ்து ,அமிழ்து என்று தொடர்ந்து சொல்லிகொண்டே வந்தால் அது தமிழ் என்று தான் முடியும் .
இவ்வாறு தமிழ் என்ற சொல்லே தனி அழகானது .
தனிச்சிறப்பு வாய்ந்த தமிழுக்கு "ழ "என்ற எழுத்து 'ழகரம் 'என்று அழைக்கப்படும் .இது தமிழுக்கு மட்டுமே உரிய உச்சரிப்போகும்.
மற்ற மொழியில் இது போன்று இல்லை .
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போன்று இனிமையானது அறியேன் .என்றார் பாரதி .பல மொழி கற்ற ,புலமை வாய்ந்த பாரதியின் சொல் ஒன்றே போதுமானதாகும் .இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழில் இலக்கணமும் இலக்கியமும் தோன்றியது .
இது போன்று உலக மொழிகளில் கிரேக்கம் ,லத்தின் ,சீனா ,சமஸ்க்கிர்தம் போன்ற மொழிக்கு மட்டுமே இந்த சிறப்பு உண்டு .
அப்போதைய நூலில் உள்ள இன்றைய அறிவியல் செய்தியும் ,பல்வேறு அரிய தகவல்கள் இன்றும் வியக்க வைக்கின்றது .
கிரேக்கம் ,லத்தின் ,போன்ற மொழிகள் இன்று பேசுவோர் மிக குறைவு .ஆனால் இன்று உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் பேசும் பழங்கால மொழி தமிழ் ஒன்றே ஆகும் .
இதுவே தனிச்சிறப்பு ஆகும் .'கால்டுவெல்' போன்ற பிற நட்டு அறிஞர்கள் ,தன்னை தமிழ் மாணவன் என்று அறிவித்து கொண்டார்
.தமிழில் உள்ள கருத்துக்கள் காலத்தை வென்று நிற்பதாக உள்ளது .
'யாதும் ஊரே யாவரும் கேளிர் ' என்ற உலக பொதுமை தத்துவம் ,இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உருவானது .
''எல்லோரும் ஒரே உறவு ,எல்லோரும் ஒரே ஊர்'".'சங்க இலக்கியம் 'தமிழின் பொற்கால இலக்கியம் என்பார்கள் .
இலக்கிய வளம் மிகுந்த செறிவு கொண்டது .அக்காலத்தில் தமிழர்களின் வாழ்க்கை முறை ,செயல் பாடு,பண்பாட்டு தொடர்பு,ஆகியவற்றை கொண்ட களஞ்சியம் ஆக உள்ளது . மக்கள் வாழ்கையை இரண்டாக பிரித்து இலக்கணம் எழுதினார்கள் .அகம் என்றும் புறம் என்றும் இரண்டாக பிரித்து இலக்கியம் உருவானது.இச்சிறப்பு தமிழை தவிர எம்மொழியிலும் இல்லை .தமிழர் கடவுளான முருகன் ,அழகன் என்றே அழைக்கப்படுகிறது .இதில் முருகு என்றால் அழகு என்று பெயர் .
தமிழ் மொழி ,திராவிட மொழி குடும்பத்தை சார்ந்த ஒன்றாகும் .திராவிட மொழிகளில் மூல மொழியாக இருப்பது தமிழ் ஆகும் .
No comments:
Post a Comment